உயிருக்குப் போராடும் காட்டுயானை காப்பாற்றுவதற்காக கடும் பிரயத்தனம்

திருகோணமலை – பன்குளம் பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் யானையொன்று வீழ்ந்து சுமார் 12 நாட்களாக உயிருக்கு போராடி வருகின்றது.குறித்த யானையை சிகிச்சையளித்து மீட்பதற்கான பணியில் வன இலாக்கா அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது.

குறித்த யானையானது சோர்வடைந்து காணப்படுவதால் அவ் யானையை இழுத்து தூக்கி மருத்துவ சேவை வழங்கினால் ஆபத்து ஏற்படலாம் என தெரிவித்து அவ்விடத்தில் வைத்தே யானையை மீட்பதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ் யானையின் உயிருக்கான போராட்டத்தை பார்த்து பொதுமக்கள் பலரும் கவலை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply