எரிபொருள் விலையை உடன் அதிகரிக்குமாறு மத்திய வங்கி வலியுறுத்து!!

எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதால், அதைத் தொடர முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானம் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாக நிதியமைச்சைக் கோரி வருகின்றது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் நிலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது நட்டத்தின் மத்தியிலேயே எரிபொருள் வழங்கல் நடைபெறுகின்றது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியிருந்தது.

Leave a Reply