
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலைய உற்பத்திப் பணிகள் தடைப்பட்டுள்ளதால் நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆயினும் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வ நடவடிக்கை எதுவும் வெளியாகவில்லை.





