வடக்கு மாகாணத்தில் மலேரியா அபாயம்!! – சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை!!

வடக்கு மாகாணத்தில் மலேரியாத் தொற்று அபாயம் காணப்படுகின்றது என்று சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்புப் பரப்புரையின் பணிப்பாளர், மருத்துவர் பிரசாத் ரணவீர இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

நான்கு வாரங்களுக்குள் நாட்டில் 4 மலேரியாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இந்த ஆண்டில் இதுவரை 6 மலேரியாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply