தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! samugammedia

பிரதான தொடருந்து மார்க்கத்தில் இரண்டு தொடருந்துகள் தவிர்ந்த ஏனைய சகல தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு நேர அஞ்சல் தொடருந்தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று காலை முதல் தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இயந்திர சாரதிகள் கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *