சிறைக்காவலில் இருந்த பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு!

<!–

சிறைக்காவலில் இருந்த பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு! – Athavan News

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 பாகிஸ்தானியர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் வாக எல்லை மூலம் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply