மோடியுடன் சந்திப்பு…! அக்கறை காட்டாத தமிழ் தேசிய கட்சிகள்…! விக்னேஸ்வரன் கவலை…!samugammedia

இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேசவேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த அழைப்பு தொடர்பில் நேற்றையதினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சி.வி விக்னேஸ்வரன்,

இந்திய பிரதமர் மோடியை தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து டெல்லியிலோ அல்லது இந்தியாவிலோ சந்திப்பதற்கு அவர்களிடம் அனுமதி கேட்டால் என்ன என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டு தான் நான் மின்னஞ்சல் மூலமாக எங்களுடைய கட்சித்தலைவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  மூன்று நாட்களுக்குள் அவர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தேன். அதனை சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும் தான் அதனை வரவேற்று டெல்லியில் சென்று 13 தொடர்பில் மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து மற்றவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் சம்பந்தனிடம் இருந்தும் எந்தப் பதில்களும் வரவில்லை, மாவை பற்றி கேள்விப்பட்ட போது இது தொடர்பில் என்னுடன் பேசுவதாக கூறியிருந்த நிலையில் எந்த பதில்களும் கிடைக்க வில்லை.  சித்தார்ந்தன் மற்றும் செல்வம் என்பவர்களுடைய கருத்துக்கள் என்ன என்பது தெரியவில்லை எனவும் சிறிகாந்தாவும் இது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில் கஜேந்திரகுமாரை இவற்றில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.அவ்வாறு சேர்க்காமல் விடுவது பிழை என்றும் அவர் தமிழ் தேசியத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு வந்திருக்கின்றார் .எங்களுடைய கருத்துகளுக்கு மாறாக கருத்துக்களை தெரிவிப்பவர்களை துரோகி என்று சொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும். சமஸ்டி தேவை என்று இந்தியாவிற்கு சென்று நாங்கள் சமஸ்டியை பற்றி கூறுவதில் பயனில்லை 13றை நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறுவது அவர்களுடைய உரித்து.

ஜக்கிய நாடுகளிலும் சென்ற வருடம் 13வது திருத்தச்சட்டத்தை குறித்து தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் 13வது திருத்தச்சட்டத்தில் தமிழ்மக்களுக்காக கையெழுத்திட்டவர்கள் அவர்களே தவிர தமிழ்த்தலைவர்கள் எவரும் 1977 உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே 13ம் திருத்தச்சட்டம் குறித்து ஒன்று சேர்ந்து இந்தியாவிடம் கோருவது நன்மை தரும் என்றும் ஒரு பத்திரிகை கூறியுள்ளது. ரணில் எதுவும் தரமாட்டார் என்று நாங்கள் கூறியிருந்தோம் ஆகவே தான் இந்தியாவிற்கு பின்னால் ஓடுகின்றீர்கள் என கூறியுள்ளனர். அப்படி அல்ல என்றும் ரணில் எமக்கு கூறியுள்ளது தான் கியூபா அமெரிக்கா என்பனவற்றிற்கு போன பின்னர் வந்து செய்வதாக கூறியிருந்தார் அவர் வந்து இதனை செய்வாரோ தெரியவில்லை.

மேலும், எந்தவொரு அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுடைய உரிமைகளை பிரித்து கொடுக்க முன்வரவில்லை  அடுத்த தேர்தலில் தங்களுக்கு வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்று நினைக்கின்றார்கள்.  நாங்கள் ஓரளவாவது தமிழ் மக்களுடைய உரிமைகளை பற்றி சிந்திக்கக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து பயனிக்கக்கூடிய நிலையில் உள்ளோம்

சில சிங்கள சக்திகள் அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர், கிராமசேவகர்கள் போன்றவர்களை திரும்பவும் அவர்களுக்கு கொடுக்காதீர்கள் என்ற முறையில் சிங்கள சக்திகள் ரணிலுக்கு உபதேசம் செய்துள்ளனர்.  அவ்வாறு செய்தீர்களானால் தமிழர் மீது எங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும் என்று பேசியுள்ளனர்.

மேலும், அரசியல் ரீதியாக சிந்திக்கும் ஜனாதிபதி கட்டாயமாக இதனை கருத்தில் எடுக்க வேண்டும்.

ஆகவே எங்களுடைய பங்கில் இதனை வலியுறுத்திக்கொண்டு தான் வரப்போகின்றோம் அதே நேரத்தில் இந்தியாவினுடைய அனுசரணைகளையும் அவர்களுடைய நெருங்குதல்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதன் காரணமாக நாங்கள் இந்தியா சென்று பிரதமர் மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *