மூதூர் வைத்தியசாலைக்கு வி.ஓ.ஜி ஒருவரை நியமியுங்கள்…! இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை…!samugammedia

மூதூர் வைத்தியசாலைக்கு வி.ஓ.ஜி ஒருவரை நியமிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூதூர் வைத்தியசாலையானது மூதூர்  சேர்வில மற்றும் விருகல் அடங்கலான மூன்று பிரதேச பிரிவுகளை அடங்கலாக கொண்ட வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையிலே வி.ஓ.எச் அல்லது வி.ஓ.ஜி கடமையாற்றிய வி.ஓ.ஜி இவர்கள் சென்ற பெப்ரவரி மாதத்தில் இருந்து அந்த வைத்தியசாலையில் இல்லாத ஒரு சூழ்நிலை காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

ஆகவே, அந்த வி.ஓ.ஜி இல்லாத காரணத்தினால் அந்த வைத்தியசாலை பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.  குறிப்பாக இந்த வி.ஓ.ஜி மூலம் வாழுகின்ற பாட்டளிபுரம் இலங்கைத்துறை நல்லூர் சேதுவரவெல நீலவெல தெய்வத்த போன்ற தூர பிரதேசங்களில் இருந்து வருகின்ற கர்ப்பிணித் தாய்மார்கள் பல கஸ்டங்களை எதிர் நோக்குகின்ற நிலைப்பாட்டிலே இந்த வைத்தியசாலை காணப்படுகின்றது.

அண்மையில் இந்த வி.ஓ.ஜி இல்லாமையினால் ஒரு கர்ப்பிணி தாயினுடைய கசப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பிரசவங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்த போதிலும் அண்மையில் குறைந்த ஒரு நிலைப்பாட்டினை அடைகின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்றது

குறிப்பாக 2021ம் ஆண்டு 1578 பிரசவங்கள் இடம் பெற்றுள்ளது 2022ம் ஆண்டு 1600 நடைபெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply