வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் ஏழாம் திருவிழா இன்றையதினம் (20.09.2023) மாலை 5:15 மணியளவில் வசந்த மண்டப பூசைளுடன் ஆரம்பமாகி வல்லிபுர ஆழ்வார் இன்று வெளிவீதி வந்தார்.
கடந்த ஆறு நாட்களாக உள்வீதியில் வலம்வந்த வல்லிபுர ஆழ்வார் இன்றையதினம் வெளிவீதி வலம் வந்தார்.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம் பெற்ற திருவிழாவில் வடமராட்சி இளைஞர்களால் பாரம்பரிய மரபுக் கலையான சிலம்பம் மற்றும் தீப்பந்த சிலம்பம் என்பன இடம் பெற்றன.
.இன்றைய திருவிழாவில் வடமராட்சியுன் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியார்கள் கலந்து கொண்டனர்.