
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக அமைச்சர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே இடம்பெற்ற கேள்வி பதில் நேரம்:
கேள்வி :ஊடக அடையாள அடடை பெறுவதில் சிக்கல் காணப்படுகிறது?
அமைச்சரின் பதில் : இனி வரும் காலங்களில் ஒரு அடையாள அட்டை மூன்று வருடங்கள் செல்லுபடியாகும்.அத்துடன் மாவட்ட தகவல் உத்தியோகத்தர் ஊடாக அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளம்.
கேள்வி :தகவல் உத்தியோகத்தர் பற்றாக்குறை தொடர்பாக?
அமைச்சரின் பதில் :தற்போது அபிவிருத்தி உத்தியோத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளில்,ஊடக துறை சார்ந்தவர்களை,உதவி தகவல் உத்தியோகக்தர்களாக கடமையாற்ற அனுமதிக்கப்படுவர் .இது தொடர்பில் நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
கேள்வி (நாடளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் ) :யாழில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சார மண்டபத்தின் பணி ஊடகத்துக்கும் உதவ வேண்டும்.அவை ஊடக வியலாளர்களின் தேடலுக்கு ஏற்றவாறான இலத்திரனியல் விடயங்களை கொண்டிருக்க வேண்டும்.இலத்திரனியல் நூலகம் அமைக்கப்பட வேண்டும்.
அமைச்சரின் பதில் :இது இந்திய அரசு,யாழ் மாநகர சபை சார்ந்த விடயம்.இது தொடர்பில் அரசு சார்பில் என்ன விடயம் செய்யலாம் என்று பார்க்கின்றேன்.பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என்றார்.
கேள்வி :ஊடகவியாலாளர்களுக்கான சம்பளம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.அத்துடன் ஊடகவியாளர்கள் இங்கு ஒற்றுமையாக இல்லை ?
அமைச்சரின் பதில் :உலக நாடுகளில் இவ்வாறு இல்லை.ஊடகவியாளர்களுக்கான சம்பளம் அரசு நிர்ணயிப்பது இல்லை.ஆனால் தொழில் ரீதியாக என்ன முயற்சி எடுக்கலாம் என்று பார்க்கின்றோம் என்றார்.உங்களுக்கான தளத்தை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.என்றார்





