திருகோணமலையில் வயது முதிர்ந்த தாயொருவருக்கு வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றாவது வீடு இன்றையதினம் (18.02.2022) திறந்து வைக்கப்பட்டது.
இவ்வீட்டினை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சரவணபவானந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வீடு அறப்பணி மையத்தின் நிறுவுனர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரரின் நேரடி கண்காணிப்பிலும், சக்தி கஜமுகன் சாம் (சுவிட்சர்லாந்து) மற்றும் சுவிட்சர்லாந்து ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆறாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கணவன் போன நிலையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதியாகி வயது முதிர்ந்த நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற தாயாரிற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீடானது ஆதிபராசக்தி அறப்பணி மையத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றாவது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.






