
தமிழ் மொழி சிங்கள மொழி என்று பார்க்க வேண்டாம், இரண்டு பக்கமும் என்ன விடயங்களை பரிமாறி கொள்ளாலாம் என்று சிந்திக்க வேண்டும் என ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்களம் என்று பார்க்க வேண்டாம்.இரண்டு மொழிகளிலும் எவ்வாறான விடயங்களை நாம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று தான் பார்க்க வேண்டும்.
நான் ஒரு குழைந்தைக்கு அண்மையில் ‘மாயா’ என்று பெயர் வைத்தேன்.
மா என்றால் மாத்தறை ,யா என்றால் யாழ்ப்பாணம்.அதை நினைவில் வைத்து தான் பெயர் வைத்தேன்.
என்னால் இங்கு தமிழ் மொழி பேச முடியவில்லை.இது எம்முடைய பிழை இல்லை.அரசியல் பொறிமுறையின் பிழை.
ஆகவே சட்டத்தால் ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது என்று நினைக்கிறன்.ஊடக சுயநிர்ணயம் பாதுக்காக்கப்படும் என்றார்.





