
யாழ்ப்பாணம்.பெப்.18:
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் பேருந்தில் சூட்சுமமானமுறையில் போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்திவந்து யாழ்ப்பாணத்திலுள்ள தரகர்களுக்கு விற்பனை செய்வதை பல நாட்களாக செய்துவந்துள்ளார்.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் பிரிவு அரியாலை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தி அந்த பெண்ணை போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது 5 லட்சம் தொடக்கம் 6 லட்சம் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.





