மண்ணெண்ணெய் குக்கர் தீ பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பெண் மரணம்

யாழ்ப்பாணம், பெப்.18

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த ஆருசன் தர்சிகா (வயது30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 9ம் திகதி மண்ணெண்ணை குக்கரில் சமைப்பதற்காக எண்ணெயை ஊற்றியபோது குக்கர் தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply