மருத்துவமனைகளுக்கு நவீன ஆம்புலன்ஸ்கள்: சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொழும்பு, பெப் 18: நாட்டில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுகாதார அமைச்சினால் 25 நவீன அம்புலன்ஸ் வண்டிகள், 38 பிக்கப் ட்ரக் வண்டிகள் வைத்தியசாலைகள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுக்வல்ல இவற்றை வழங்கினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி, சுகாதார அமைப்பு மேம்படுத்தல் திட்டத்தின் நிதி உதவியுடன் இந்த வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிக்கப் டிரக் ஒன்றின் விலை சுமார் ரூ. 11 மில்லியன் ஆகும். ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் பெறுமதி ரூ.15 மில்லியன் ஆகும்.

தொலைதூரப் பகுதிகள், உள்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த ஆம்புலன்ஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply