மத்திய மலைநாட்டில் காலை முதல் தொடர்ந்து மழை – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு! samugammedia

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் இப் பகுதியில் அதிக அளவில் குளிரும், பணி மூட்டம் காணப் படுகிறது.

குறிப்பாக மத்திய மலைநாட்டில் எங்கு பார்த்தாலும் பணி மூட்டம் காண கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக நுவரெலியா கொழும்பு ஏ.7. வீதியில் பல்வேறு இடங்களில் அதிகளவில் பணி மூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் இப் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் நாளாந்த பணியை மேற்கொள்ள சிறமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Leave a Reply