அரச மருத்துவ அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடத் தீர்மானம்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தொழிற்சங்க போராட்டத்தினை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இந்த போராட்டத்தை கைவிடத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் 21ஆம் திகதியன்று தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply