வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிளில் 'ரேஸ்' – சிக்கிய எட்டு இளைஞர்கள்..! தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிளுடன் எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (08) இடம் பெற்றது. 

குறித்த மோட்டார் சைக்கிலானது போட்டிக்காக கொண்டு வந்ததாகவும், இதில் ஆறு மோட்டார் சைக்கிளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவருகிறது. 

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சுமார் 20 தொடக்கம் 25 வயதுடைய மீகமுவ மற்றும் அதனை அண்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களை உரிய மோட்டார் சைக்கிளுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply