விடுமுறையை கழிக்க கொழும்பிலிருந்து வீடு திரும்பிய இளைஞர்கள் கைது…!samugammedia

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இரு இளைஞர்கள் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரும் பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயது உடையவர்கள் என்றும் அவ்விருவரும் கொழும்பில் வேலைச் செய்பவர்கள் என்றும் விடுமுறையை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

பெற்றசோ தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இவ்விரு இளைஞர்களையும் சோதனைக்கு உட்படுத்திய போது,அவர்களிடம் தலா 5 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு இருந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *