D-MEDIA ஏற்பாட்டில் முரளியின் ‘800’ திரைப்படத்தில் நடித்த கலைஞர்களின் சந்திப்பு!

D-MEDIA ஏற்பாட்டில் வெற்றிநடைப் போட்டுவரும் முரளியின் ‘800’ திரைப்படத்தில் நடித்த கலைஞர்களின் சந்திப்பு, நேற்று (புதன்கிழமை) கொழும்பு- கிரேண்ட் ஒரியன்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இத்திரைப்படத்தில் நடித்த இலங்கை கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அவர்களின் அனுபவத்தையும் ஜாம்பவான் முரளியுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

அத்துடன் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில், சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் ஜாம்பவான் முரளி சிறப்பாக பதிலளித்தார்.

இதுதவிர ஜாம்பவான் முரளி, தனது கிரிக்கெட் அனுபவம் மற்றும் இத்திரைப்படம் உருவான விதம் என பல விடயங்களை சுவாரஸ்யமான மொழி நடையில் பகிர்ந்துக் கொண்டார்.

 

Leave a Reply