தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் கைது..! samugammedia

 

கல்பிட்டியில் மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், கல்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.  

தனது இரு மைத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை சமரசம் செய்ய முற்பட்டபோதே கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (22 ) இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply