வவுனியா நகரசபை தீயணைப்பு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்…!samugammedia

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதனால் அதனைத் திருத்தும் நடவடிக்கைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அச்சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வாகனத்தின் திருத்தப் வேலைகள் நிறைவடைந்ததும் மீளவும் அதன் பணிகள் மிக விரைவில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply