தலைமன்னார் கடலில் 25 இந்திய மீனவர்கள் கைது…!samugammedia

தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(28) சனிக்கிழமை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply