நீர் தொட்டியில் விழுந்து 14 வயது சிறுவன் பரிதாபமாக பலி..! திருகோணமலையில் சோகம்..! samugammedia

திருகோணமலை – எத்தாபெதந்திவெவ பகுதியில் நீர் தொட்டியில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த சனுக பாசன எனவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

குறித்த சிறுவனின் தாய் உயிரிழந்ததாகவும், தந்தை பிள்ளைகளை விட்டுச்சென்று வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் குறித்த சிறுவன் தனது மாமாவின் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் வேளாண்மை செய்வதற்காக நீர் தொட்டியில் நெல் போடப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இறங்கி விளையாடிக்கொண்டிருந்த போது விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சிறுவனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதாகவும், தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply