கொழும்பு துறைமுகத்தில் “ஷி யான் 6” கப்பலுக்கு மேலும் இரு நாட்கள் அனுமதி…!samugammedia

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள “ஷி யான் 6” மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கப்பல் இன்று  பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது.

ஆனால் நாளை மறுதினம் வரை  கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply