அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு…!samugammedia

அஸ்வெசும சமூக நலத் திட்டத்தின் பயனாளிகளுக்கான அடுத்த கொடுப்பனவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஐப்பசி மாதத்திற்கான கொடுப்பனவுகள்  எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி  பயனாளிகளுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் முதலாம் திகதி குறித்த பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply