தீபாவளிப் பரிசு..! சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு…!நாளை முதல் அமுலுக்கு…!samugammedia

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எரிவாயு விலை அதிகரிப்பினால் உணவுப் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply