யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் விமான நிலையத்தில் கைது…!samugammedia

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து விமானத்தில் பலாலி ஊடாக நாடு திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த முக்கிய நபர்களின் சகாவே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

27 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply