மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! samugammedia

நாட்டில் மின்னல் எச்சரிக்கை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply