கிழக்கு ஆளுநரால் காணி அனுமதிப் பத்திரங்களுக்கான கடிதங்கள் மக்களிடம் கையளிப்பு…!samugammedia

காணிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு மூதூரில் இன்று இடம்பெற்றது. 

மூதூர் பிரதேச செயலகத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று(10) உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், செக் குடியரசின் உயர்ஸ்தானிகர், மேலதிக மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர், மூதூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய நிகழ்வில் காணி கச்சேரி ஊடாக 200 காணி உரிமையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கான கடிதம் கையளிக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *