யாழில் நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..! பரிதாபமாக பலி..! samugammedia

 

நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய அமிர்தலிங்கம் கமலேஸ்வரி  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நேற்றையதினம் வியாழக்கிழமை (09) நலன்புரி உதவித்திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டிலிருந்து சென்றதையடுத்தே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.   

Leave a Reply