புத்தளத்தில் திடீரென குவிந்த மக்கள்…! மீட்கப்பட்ட ஆணின் சடலம்…! samugammedia

புத்தளம் முள்ளிபுரம் கலப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் சடலமொன்று மிதந்து காணப்படுவதை அவதானித்துள்ள நிலையில் புத்தளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

பின்னர் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டதுடன் புத்தளம் நகர திடீர் மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டார்.

இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். 

இதன்பின்னர் கலப்பில் மிதந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை மீனவ சங்கத்தினரின் உதவியுடன் படகில் கொண்டு சென்றனர். 

குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


Leave a Reply