காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு..! samugammedia

ஹாலிஎல – ரொக்கத்தன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், ரொக்கத்தன்ன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கதன்ன பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த குறித்த இளைஞர், வீடு திரும்பாததையடுத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று அதிகாலை அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி குறித்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply