சதொச விற்பனை காட்சியறையில் திருட்டு…! மூவர் கைது…!samugammedia

இரத்தினபுரி சதொச விற்பனை காட்சியறையை உடைத்து 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மதுபான போத்தல்களை திருடிய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ச.தொ.ச விற்பனை காட்சியறையை உடைத்து சுமார் 40 மதுபான போத்தல்களை இவர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 37, 36 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply