ப.நோ.கூ. சங்க கூரையை பிரித்து கொள்ளை -பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! samugammedia

வதிரி அரசடிப் பகுதியில் உள்ள ப.நோ.கூ. சங்க கிளை ஒன்று கூரை பிரித்து திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று  புதன்கிழமை(22) நள்ளிரவு இத் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்குரிய மேற்படி கிளையை புதன்கிழமை(22) மாலை மூடி விட்டு சென்ற கிளை முகாமையாளர்  இன்று வியாழக்கிழமை(23) காலை கிளையினை திறக்க  சென்றபோது சீட் கழட்டி திருடப்பட்டமை  தெரிய வந்தது.

இது தொடர்பில்  நெல்லியடி  பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply