புதுக்குடியிருப்பில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும் கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.

அதன்படி இன்றையதினம் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply