
கொழும்பு, பெப்.20
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை பதில் வழங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் முன்வைக்கவுள்ளார்.
இந்த அறிக்கையின் பிரதி கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பயங்கரவாத தடை சட்ட நீக்கம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.
அத்தோடு, இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள நிலையில், அறிக்கைக்கான பதிலை இலங்கை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





