1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

169,000 முதல் 190,000 ரஷ்ய துருப்புக்கள் இப்போது உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply