போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்:

போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கூறியதாவது, சட்டவிரோத சாரதிகளின் செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு 22 ஆயிரம் வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இந்த விபத்துகளில் 14 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

நாளாந்தம் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுள் கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply