
கொழும்பு, பெப் 20: குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: கொத்தடுவ, மஹரகம, கடுவெல மற்றும் கஹதுடுவ பொலிஸ் பிரிவுகளில் நடந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வரை கைது செய்துள்ளோம். இவர்கள் 21 – 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்களால் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டி, கையடக்கத் தொலைபேசி, குற்றச் செயல்களில் ஈடுபடும் போது மக்களை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட ஏர் ரைபிள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.





