11 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!

மாத்தளை – கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவனே இவ்வாறு இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த சிறுவன் இறுதியாக சாம்பல் நிற டீசேர்ட்டும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் மாத்தளை பொலிஸாரிடம் சிறுவனின் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 070-7778940 என்ற ​அலைபேசிக்கோ அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply