யாழில் மாபெரும் பட்டப்போட்டி!

தைத்திருநாளான நேற்றைய தினம் (15) யாழில் மாபெரும் பட்டப்போட்டியொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற குறித்த பட்டப்போட்டியில் 60 க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானை அலங்கரித்தன.

இப்போட்டியில் ‘ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்‘ என்ற பட்டம் முதலிடத்தையும், ‘விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கை கோள்‘ என்ற பட்டம் 2 ஆம் இடத்தையும், ‘ஏலியன்ஸ் மர்ம தாக்குதல் விமானம்‘ என்ற பட்டம் 3 ஆம் இடத்தையும் பிடித்தன.

இதற்கமைய முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட பட்ட வடிவமைப்பாளர்களான  வினோதன்(1), பிரசாந்த்(2), கம்ஸன்(3) ஆகிய மூவரும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இப்போட்டியைக் காண, மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *