உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது.

அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்து 8 ஆயிரத்து 160ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 1.85 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 1.13 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முறையே 2,3,4,5ஆம் இடங்களில் உள்ளன.

Leave a Reply