ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் நாளை போராட்டம்..! தென்னிலங்கையிலிருந்தும் ஆதரவு…!samugammedia

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தை யாழ். ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த போராட்டமானது நாளையதினம்(25) யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு யாழ். ஊடக அமையம்  அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply