சஜித் பிரேமதாச முட்டாள்தனமான மனிதர்…! உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவிப்பு…!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் முட்டாள்தனமான மனிதர் எனவும் அவருடன் பழகிய போது அதனை புரிந்துக்கொள்ள முடிந்ததாகவும்  ச

மூக ஆர்வலரும் ஆசிரியருமான உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாச என்பவர் மேடைகளில் கூறுவதை போல் இரவில் வேலை செய்யும் நபர் அல்ல. நீச்சல் தடாகத்தில் குளிக்கும் போதும் கூட சுற்றியும் பாதுகாப்பு பரிவாரங்களை வைத்துக்கொண்டே குளிப்பார்.

மேடைகளில் கூறுவதை போல் நடைமுறை வாழ்க்கையில் நடந்துக்கொள்வதில்லை.

அதேபோல் அனுரகுமார திஸாநாயக்க மக்கள் அறிந்துள்ள ஊழல் மோசடிகள் பற்றி மீண்டும் உரத்த குரலில் கூறுவதை மட்டுமே செய்து வருகிறார்.

இதனை விடுத்து பொருளாதாரமோ அல்லது நாட்டை கட்டியெழுப்பும் எவ்வித புதிய கொள்கை திட்டங்களோ அவரிடம் இல்லை.

இவர்களுடன் ஒப்பிடும் போது, சர்வதேசத்துடன் ஏதோ ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு, வேலை செய்யக்கூடிய ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்  எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply