
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னாள் தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரர், அவை குறித்து தொடரப்பட்டுள்ள மேல் நீதிமன்ற வழக்கில் பகிரங்க மன்னிப்பு கேட்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.

