பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – 36 மாணவர்கள் காயம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று  சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply