இலங்கையினால் தொடர் முடக்கத்தினை தாக்குப்பிடிக்க முடியாது- அஜித் நிவாட் கப்ரால்

இலங்கையினால் தொடர் முடக்கத்தினை தாக்குப்பிடிக்க முடியாதென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமுலிலுள்ள முடக்கம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை தொடர்ந்து முடக்கினால் அனைத்து பொருளாதார கோட்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும்.

அதாவது, சுமார் 4.5 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் இதனால் பாதிக்கப்படுவர்.

இதேவேளை குறித்த முடக்க காலத்தில், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply