நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்…!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக எட்டு பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில்  நேற்றையதினம்(05) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் அனுசரணையோடு, 2024 கனடா தேர்தல் ஆணையத்திற்கான பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக பின்வருவோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் சேர்ந்ததே நா.க.த.அரசாங்கத்தின் கனடா தேர்தல் ஆணையமாகும்.

தேர்தல் ஆணையாளருடன் (கனடா) இணைந்து இவர்கள் கனடாவில் நடைபெற இருக்கும் 2024 நா.க.த.அ. தேர்தல் நடைமுறையின் சகல கட்டங்களிலும் திட்டமிடல், நிறைவேற்றல், ஆகிய பொறுப்புக்களை பகிர்ந்து கொள்வதுடன், மேற்கூறப்படும் பணிகளிலும் அனுசரணையாக இருப்பார்கள். 

2024 தேர்தலில் (கனடா) மேலதிகமாக இப் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிராந்தியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இப் பிராந்தியங்களின் தலைமைத் தேர்தல் அலுவலர்களாகவும் (Chief Election Officers) பொறுப்பு வகிப்பார்கள்.

இவர்கள் தேவைக்கேற்ப, தேர்தல் ஆணையத்தின் சார்பாகவும் செயற்பட்டு தமது பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிகளின் தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு(Presiding Officers) வேண்டப்படும் உதவிகளையும் வழங்குவார்கள்.

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக  நடராஜா புவனேந்திரா, ஸ்கந்தவேல் சுப்ரமணிதாஸ், பிரதர்ப் கிட்னாப்பிள்ளை, கௌசல்யா ஆனந்தன்தராஜா, அனுஷா ராதாகிருஷ்ணன், குரு யோகராஜா, ரெஜி அன்டன், சுகந்தன் அந்தோனிப்பிள்ளை ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *