திருமலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரி…!

திருமலையில் ஹெரோயினுடன் போதைபொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் .

விசேட பொலிஸ் அதிரடி படைப் பிரிவுடன் இணைந்து தலைமையக பொலிஸாரும் மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 36 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெரோயினை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின்  3 கிராம் 300 மில்லி கிராம் என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த  நிறையுடை ஹீரோயின் 84 பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் ஒரு போதைப்  பொருள் வியாபாரி எனவும், அவர் மீது நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்ததாக தலைமையக பொலிஸார்  தெரிவித்தனர்.

போதைப்பொருள் வியாபாரியையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் இன்று(10)நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் தலைமையக பொலிஸார்  ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply